அஜித்தை பற்றி பலருக்கும் தெரியாத உண்மையை கூறிய இயக்குனர்

நடிகர் அஜித் நடித்திருந்த விஸ்வாசம் படம் பல குடும்பங்களை கவர்ந்தது அனைவரும் அறிந்ததே. இனி நேர்கொண்ட பார்வை வெளியாகப்போகும் நாள் நெருங்கி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடி வருகிறது.

அவரை பற்றி கேட்டால் பலரும் நல்ல விசயங்களை தான் கூறி வருகிறார்கள். மற்ற பிரபலங்களின் நேர்காணல்களிலும் அவரை பற்றிய கேள்விகளும் இடம் பெற்றுவிடுகிறது.

அந்த வகையில் களவாணி படத்தின் இயக்குனர் சற்குணத்திடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு பிடித்த நடிகர் அஜித். நல்ல மனிதர். கிரீடம் படத்தில் நானும் பணியாற்றி இருந்தேன்.

அப்போது 9 மணிக்கு ஷூட்டிங் நேரம் என்பதால் நாங்கள் கிளம்பி சென்றுவிட்டோம். ஆனால் அங்கு அஜித் சார் முன்பே வந்து காத்திருந்தார். அப்போது படத்தை மற்றவர்கள் யாரும் கூட அங்கு இல்லை. நான் அவரிடம் Sorry சார், 9 மணிக்கு தான் ஷூட்டிங் டைம், உங்களிடம் யாரோ தப்பா சொல்லிட்டாங்க என கூறினேன்.

அதற்கு அவர் எனக்கும் 9 மணி என தான் சொன்னார்கள். நின்றால் முதுகு வலி, நடந்தால், உட்கார்ந்தால், படுத்தாலும் வலிக்கிறது. என்ன செய்வதென தெரியவில்லை. அதனால் தான் கிளம்பி வந்துவிட்டேன் என கூறினார்.

ஒரு பெரிய நடிகர் நினைத்தால் ஷூட்டிங்கை கேன்சல் செய்யலாம். ஆனால் அஜித் சார் தயாரிப்பாளர்கள் நலனை யோசிப்பார். இதிலிருந்தே அவரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என சற்குணம் கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com