அஜித் அட்வைஸை மதிக்காக ரசிகர்கள்? விஜய் பற்றி இவ்வளவு மோசமாகவா ட்ரெண்ட் செய்வது..

தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் நடந்து வரும் ரசிகர்களின் சண்டை பற்றி நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரில் அஜித் ஒரு வசனம் பேசியிருப்பார். ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என அஜித் பேசியிருப்பார்.

ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்ற நடிகர்களை அசிங்கப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்பதை தான் அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பார். ஆனால் அவர் சொன்னதையும் சில ரசிகர்கள் கேட்கும் நிலையில் இல்லை.

நேற்று விஜய் பற்றி மிக மோசமாக தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். #June22VijayDeathDay அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர். நாளை மறுநாள் விஜய் பிறந்தநாள் வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

மறுபுறம் விஜய் ரசிகர்கள் #LongliveAjith என ட்ரெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com