அஜித் மிகவும் வெட்கப்படுவது எந்த விஷயத்திற்கு தெரியுமா? வித்யா பாலன் கூறியது

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை வித்யா பாலன். முதலில் இப்படத்தில் அவர் நடித்ததற்கு காரணமே தயாரிப்பாளர் போனி கபூர் தானாம்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நேரத்தில் படம் குறித்தும், படத்தின் நாயகன் அஜித் பற்றியும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார் நடிகை வித்யா பாலன்.

அதில் அவர், அஜித்தின் குணத்தை கண்டு தான் வியந்துள்ளேன், அவ்வளவு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர் என் முன் மிகவும் சாதாரணமாக இருந்தார். அதைக்கண்டு நான் அதிகம் ஆச்சரியப்பட்டேன், யாராவது அவரை புகழும் போது மிகவும் வெட்கப்படுவார் என்று பேசியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com