அதுக்காக எல்லாம் வாயைக் கட்டி, வயித்த கட்ட முடியுமா?: நித்யா மேனன்

nithya-menon

நித்யா மேனன் அளித்துள்ள பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மெர்சல் படத்தில் ஐஸாக நடித்து தளபதி ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகிவிட்டார் நித்யா மேனன். பூசினாற் போன்று இருந்த அவர் தற்போது வெயிட் போட்டு குண்டாகிவிட்டார். அவர் குண்டானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

என்ன நித்யா இப்படி தொப்பையும், தொந்தியுமா குண்டாகிவிட்டீர்களே என்று ரசிகர்கள் கேட்டனர். அவர் இடத்தில் வேறு எந்த நடிகை இருந்திருந்தாலும் டென்ஷனாகி அய்யய்யோ குண்டாகிவிட்டேனே என்று புலம்பித் தள்ளியிருப்பார்.

நித்யா மேனனோ கூலாக உள்ளார். ஷூட்டிங் இல்லாதபோது வீட்டில் நன்றாக சாப்பிட்டேன், வெயிட் போட்டுவிட்டது. அதற்கு என்ன. வெயிட் போடுகிறது என்பதற்காக பிடித்ததை சாப்பிடாமல் இருக்க முடியாது என்கிறார் நித்யா.

உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள பெயருக்கு சாப்பிட்டு, ஜிம்மே கதி என்று கிடந்து கடினமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் நித்யா வித்தியாசமானவராக உள்ளார்.

புதுப் படம் ஒன்றில் நித்யா மேனன் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். அதனால் அவர் தனது உடல் எடையை குறைக்க உள்ளார். வெயிட் பிரச்சனையை நித்யா கூலாக கையாளும் விதம் அனைவருக்கும் பிடித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *