அத்தளபத்தில் சென்ற சூர்யாவின் NGK வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ்

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் NGK படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது. எதிர்ப்பார்த்தது போலவே படத்திற்கும் பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

ஆனால், என்னவென்று தெரியவில்லை சூர்யாவிற்கு இந்த படம் NGK வெளிநாடுகளில் எந்த ஒரு இடத்திலும் பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை.

அதிலும் அமெரிக்காவில் இப்படம் தற்போது வரை ரூ 1 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், சுமார் 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தால் தான் போட்ட பணமே வருமாம்.

அதேபோல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, யுகே ஆகிய இடங்களிலும் இப்படம் மிக மோசமான வசூலை தான் தந்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், ஶ்ரீலங்கா ஆகிய இடங்களின் வசூல் இன்னும் தெரியவில்லை, அரபு நாடுகளில் ரூ 2.6 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com