அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

Rajni

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் . இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இமயமலை சென்றுள்ளார் .

டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் இன்னும் முழுமையான அரசியலில் ஈடுபடவில்லை என்றும், ஆன்மீகரீதியாகவே இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இமயமலை பயணத்திற்குப் பின் முழுமையாக அரசியலில் ஈடுபடுவார் என்றும், கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இமயமலை பயணத்தை நிறைவு செய்து முடித்தவுடன் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் இரண்டு வாரங்கள் அவர் அங்கே தங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது.

Share

One thought on “அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன