அருண் விஜயின் அடுத்த சர்ப்பிரைஸ்!

அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அருண் விஜய். பிரபல நடிகரான விஜய் குமாரின் மகனாக இருந்தாலும் அஜித்துடன் நடித்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

அதிலும் அதாரு அதாரு பாடல் அவருக்காக தான் என அஜித்தே சொல்லிவிட்டார். கடந்த வருடம் அருண் விஜய் நடித்த குற்றம் 23 படம் அவருக்கு நன்றாக அமைந்தது.

இதனை தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை தற்போது ட்விட்டரில் அவர் உறுதி செய்துள்ளார்.

இதற்கு நடிகை ஆர்த்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அருண் விஜய் இந்த பெரிய கூட்டணியை தொடர்ந்து விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு வரும், மிகுந்த சர்ப்பிரைஸ் ஆக இருக்கும் என கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com