’அவதார் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஜேம்ஸ் கேம்ரூன்

avatar-2

உலக மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ’அவதார் – 2’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 21, 2021ல் வெளிவரும் என இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்றும் 3டி படங்கள் டிரெண்டிங்கில் இருப்பதற்கும், திரைப்பட தொழில்நுட்பம் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றதற்கும் முழு முதற் காரணமாக இருக்கும் திரைப்படம் தான் ’அவதார்’. 2009ம் ஆண்டில் வெளியான இந்த படம் மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்படும் என சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா படைப்புக்கான இலக்கணத்தை மாற்றி எழுதியது அவதார். இந்த இரண்டாம் பாகமும் சினிமாவை அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com