ஆதியுடன் கைகோர்க்கும் சிம்பு

simbu
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச்சிவந்த வானம்’ வருகிற செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதேநேரத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக ஹிப்ஹாப் ஆதி, சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சுந்தர்.சியின் அரண்மனை 2, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களுக்கும் ஆதியே இசைமைத்திருந்தார். அதுமட்டுமின்றி ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு படத்தை சுந்தர்.சி தான் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன