இதுதான் காரணமாம்! அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்கு. பிரபலம் கூறிய தகவல்

அஜித்தின் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படம் இந்தியின் பிங்க் ரீமேக்காக உருவாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அஜித் இப்படத்தில் நடித்ததற்கான முக்கியமான காரணத்தை தங்களிடம் கூறியதாக இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கூறியுள்ளார்.

அவர் அஜித் கூறியதாக கூறுகையில், தனக்கும் பெண் குழந்தை உள்ளது, அதனால் தனக்கும் ஒரு பொறுப்பு உள்ளதாகவும், அதற்காக தான் இந்த படத்தில் நடித்ததாகவும் எங்களிடம் கூறினார் என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com