இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது

ஷங்கர் – கமல் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து செம்ம ஹிட் ஆன படம் இந்தியன். இப்படம் வெளிவந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

கமல் தன்னுடைய அரசியல் பயணத்தை துவங்கிவிட்டதால் இப்படம் நின்று போகும் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை பொயாக்கும் விதமாக தற்போது இப்படத்திற்கான பணிகள் மும்முரமாகத் தொடங்கி விட்டன. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு அங்குத் துவங்கும் என்றுக் கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com