இந்த ஒரு காரணத்திற்காக வித்யா பாலனை நிராகரித்த விஜய்!

விரைவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் ‘தலைவி’ இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

அதில் பாலிவுட் நடிகை கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கவுள்ளார். அதற்காக அவருக்கு 24 கோடி ருபாய் சம்பளமாக தரப்படுகிறது. இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு இதுதான் மிக அதிக சம்பளம்.

முதலில் ஜெயா ரோலில் நடிக்க வித்யா பாலனை தான் இயக்குனர் விஜய் அணுகினாராம். ஆனால் அவர் கதை, ஜெயலலிதா பற்றி பல கேள்விகள் கேட்டுள்ளார். பதில் அளிக்கமுடியாத அளவுக்கு பல கேள்விகள் இருந்ததால் விஜய் வேறு வழி இன்றி அவரை நிராகரித்துவிட்டு வேறு நடிகையை தேடி சென்றுவிட்டாராம்.

அந்த சமயத்தில் தான் கங்கனா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com