இப்படி ஒரு ரோல் கிடைத்தால் நிச்சயம் ஹீரோவாக நடிப்பேன்: யோகி பாபு

Yogi Babu

நடிகர் யோகி பாபு மட்டும் தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காமெடிக்காக இருக்கும் ஒரே ஆறுதல். சந்தானம், வடிவேலு உள்ளிட்டவர்கள் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என வேறு ட்ராக்கில் சென்றுவிட்டதால் யோகி பாபு தான் தற்போது முன்னணியில் இருக்கிறார்.

காமெடியாக மட்டுமே நடித்து வரும் அவரிடம் உங்களின் டிரீம் ரோல் என்ன என கேட்டதற்கு, “ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணி நடித்த ரோல் தான்.. அதில் ஒரு அழுத்தமான கருத்து உள்ளது.”

“அந்த ரோலில் நான் கச்சிதமாக நடிப்பேன். அப்படி ஒன்று கிடைத்தால் நான் லீட் ரோலில் நடிப்பேன்” என யோகி பாபு தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com