உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம்

நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் ஆகிய அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் பயணம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின், வலுவான பின்னணி இருப்பதால் சமீபகாலமாக அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து திமுக தொண்டர்கள் அவருக்கு ‘மூன்றாம் கலைஞர்’ என்ற பட்டத்தை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி அவர்கள் உதயநிதிக்கு ‘மக்கள் அன்பன்’ என்ற புதிய பட்டத்தை கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தின் டைட்டில் கார்டில் ‘மக்கள் அன்பன்’ உதயநிதி என்றே போடப்படும் என தெரிகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com