எங்கேயும் எப்போதும் பட ஹீரோவுக்கு ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதி

ஜெய், அஞ்சலியின் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் எங்கேயும் எப்போதும். இதில் இன்னொரு நாயகனாக நடித்திருந்தவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த்.

தற்சமயம் கோலிவுட்டில் ஹிட்டடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுடன் நடித்துவரும் இவர் சமீபத்தில் தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு ஸ்கை டைவிங் செய்துகொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தால் படுகாயமடைந்துள்ளார்.

இதனால் சர்வானந்திற்கு கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு, மற்றும் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இரண்டு மாதங்கள் சர்வானந்திற்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் 96 தெலுங்கு ரீமேக் உருவாவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com