கமலின் சர்ச்சை பேச்சு : கருத்து சொல்ல ரஜினி மறுப்பு

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியே ஒரு இந்து தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமலின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவரின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில, தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினகாந்த். அவரிடத்தில் கமலின் இந்து தீவிரவாதம் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. தர்பார் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று சொல்லிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com