‘கமல்-விக்ரம்’ படத்தை நிராகரித்த ‘பிரபல’ நடிகர்.. காரணம் என்ன?

kamal-vickram

கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் விக்ரம் ஹீரோவாக நடிக்க, ராஜேஷ் எம்.செல்வா படத்தை இயக்கவிருக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நிதின் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் நிதினும் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “விக்ரம்-கமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டது உண்மைதான். ஆனால் என்னிடம் தேதிகள் இல்லை என்பதால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை,” என கூறியிருக்கிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன