கால்பந்தாட்டத்தை கையில் எடுக்கும் சுசீந்திரன்

director-suseendran
இயக்குனர் சுசீந்திரன் கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுசீந்தரன் பாண்டிய நாடு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இவர் வெண்ணிலா கபடி குழு, ஜீவா திரைப்படத்தில் கபடி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை மையமாக வைத்து படத்தை இயக்கியிருப்பார்.

தற்போது அவர் புது முகங்களை வைத்து ’ஏஞ்சலினா’என்ற படத்தை இயக்கி முடித்து. அதை ஜுன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று எடுக்க உள்ளார்.
இந்த படத்தில் இசையமைப்பதற்காக மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். மேலும் ஹிரோவாக ரோஷன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்னு நடிக்கவுள்ளார்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன