கால் பந்தாட்டத்திற்காக மீண்டும் யுவனிடம் கூட்டணி வைத்த சுசீந்திரன்

yuvan

இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக இயக்க இருக்கும் கால் பந்தாட்டத்தை மையப்படுத்திய கதையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்திருக்கிறார்.

‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இப்படத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன், கிஷோர், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கபடி ஆட்டத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை அடுத்து ‘நான் மகான் அல்ல’, ‘ராஜபாட்டை’, ‘பாண்டிய நாடு’ போன்ற கமர்ஷியல் படங்களை கொடுத்தார். பின்னர், கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கினார். இதிலும் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது.

தற்போது புதிய முகங்களை வைத்து இயக்கும் ‘ஏஞ்சலினா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளதாக சுசீந்திரன் கூறியுள்ளார். இவர் அடுத்ததாக கால்பந்தை மையமாக வைத்து படம் எடுக்க இருக்கிறார்.

இதில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார். கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இப்படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் மீண்டும் இணையும் படம் இது. இப்படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்டக்காரர்களை இயக்குனர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன