காவிரி விவகாரம் – வைரமுத்து கருத்து

201801140330228125_Andal
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு மவுனமாகவே இருக்கிறது.
உச்சநீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என்று கூறியிருந்தார்கள். தற்போது கவிஞர் வைரமுத்துவும் காவிரி மேலாண்மை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்’ என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன