கேரளாவில் ரகசியமாக நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்….

nayanthara-vignesh-shivan

நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று காரணம் இல்லாமல் சொல்லவில்லை.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் காதல் பற்றி கேட்டால் இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் அண்மையில் நடந்த விருது விழாவில் விக்கியை வருங்கால கணவர் என்றார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றது ஒரு முக்கிய விஷயத்தை கொண்டாடுவதற்காக என்று தெரிய வந்துள்ளது.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாம். இந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்களாம்.

நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு தான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்
அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர் தனது கலைப்பணியை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன