சித்தார்த்துடன் மீண்டும் இணைந்த பாபி சிம்ஹா!

‘ஜிகர்தண்டா’ படத்தை அடுத்து சித்தார்த்தும், பாபி சிம்ஹாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர்கள் திலீப், சித்தார்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படம் ‘கம்மார சம்பவம்’. இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரை பார்த்தவர்கள், அதில் திலீப், சித்தார்த் இருவரின் கெட்டப்புகளையும் கேரக்டர்களையும் தாண்டி பாபி சிம்ஹாவின் சர்ப்ரைஸ் என்ட்ரியை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளனர். சித்தார்த்திற்கு மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்றாலும், பாபி சிம்ஹா மலையாளத்தில் ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தில் மலையாளத்திலும் வட்டி ராஜாவாக நடித்தவர் பாபி சிம்ஹா.அதன்பின் ‘பிவேர் ஆப் டாக்ஸ்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் பாபி சிம்ஹா. அடுத்ததாக ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் சில வினாடிகளே வந்து செல்லும் கேரக்டரில் நட்புக்காக நடித்துக்கொடுத்தார் பாபி சிம்ஹா. ‘ஜிகர்தண்டா’ படத்தில் சித்தார்த்துடன் இணைந்து அவருக்கு வில்லனாக நடித்த பாபி சிம்ஹா, இந்தப்படத்திலும் சித்தார்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன