செல்வராகவன் ஓபன் டாக் ஆயிரத்தில் ஒருவன்-2வில் அது இருக்காது.

செல்வராகவன் எப்போதும் மனதில் பட்டதை பேசும் ஆள். என்ன அவரை பேச வைப்பது தான் கடினம். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் தலையை காட்ட மாட்டார்.

தன் படம் பற்றிய வேலைகளில் மட்டுமே எப்போதும் பிஸியாக இருப்பார். அந்த வகையில் சமீபத்தில் என்ஜிகே பட ப்ரோமோஷனுக்காக ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.

அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்களை தவறாக காட்டியதாக கூறப்பட்டதே? என கேட்டனர், அதற்கு அவர் ‘நான் அப்படி ஏதும் காட்டவில்லை, இரண்டாம் பாகத்தில் மிக பாசிட்டிவாக தான் காட்டுவேன்’ என்றார்.

மேலும், விஜய், அஜித்துடன் எப்போது? என கேட்க, அவர்களுடன் பணிபுரிய யாருக்கு தான் ஆசை இருக்காது, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன் என்று பதில் அளித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com