தள்ளிப் போகிறதா “காலா” ரிலீஸ்?

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. இந்த 2 படங்களில் முதலில் எது ரிலீஸ் ஆகும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. வரும் ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து பட ரிலீஸ் வேலை நடைப்பெற்று வருகிறது. பட டீஸரும் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் கோலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் திடீர் வேலை நிறுத்தம் ஆரம்பித்திருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் ஒருபக்கம் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கும் நிலையில் மற்றொருப் பக்கம் திரை அரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் கட்டணத்தை அரசு உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16ம் தேதிமுதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு முடிந்து மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. அடுத்தமாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காலா பட ரிலீஸும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. ஆனால் தேதி மாற்றம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com