தேசப்பற்று கொண்டவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் – கங்கனா ரணாவத்

ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கனா ரணாவத் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். ‘மணி கர்னிகா’ என்ற இந்தி படத்தில், ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக வாள் ‘சண்டை’, ‘குதிரையேற்றம்’ போன்ற சாகச பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

கங்கணா ரணாவத் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனக்கு 31 வயது ஆகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிறந்தநாள் வரும்போது ஏதேனும் ஒரு சபதம் எடுத்துக் கொள்வார்கள். எனது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நட திட்டமிட்டேன். ஆண்டுக்கு ஒரு மரக்கன்று என்ற வகையில் 31 மரக்கன்றுகளை நட்டேன்.

இது மகிழ்ச்சியாக இருந்தது. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மனஅழுத்தங்களை குறைக்க முடியும். என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது? கணவராக வருகிறவருக்கு என்ன தகுதிகள் வேண்டும்? என்றெல்லாம் கேட்கிறார்கள்.

கணவராக வருகிறவர் நல்லவராக இருக்க வேண்டும். அழகானவராகவும் இருக்க வேண்டும். நன்றாக சிரிக்க வேண்டும். மற்றவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும். சமைக்க தெரிய வேண்டும். இதற்கு எல்லாம் மேலாக அவர் இந்திய நாட்டை நேசிக்கிறவராகவும் இருக்க வேண்டும். எனக்கு தேசபக்தி அதிகம்.

ஒருவேளை யாரையெனும் நான் காதலித்தால் கூட, பிறகு அவருக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தெரியவந்தால் உடனடியாக காதலை முறித்துக் கொள்வேன். தாய்மண் மீது அன்பு இல்லாதவரால் என் மீது எப்படி அன்பாக இருக்க முடியும்? என்னை காதலித்தால் மட்டும் போதாது. நாட்டையும் நேசிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com