நடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்

நயன்தாராவின் சம்பளம் தவிர அவரது உதவியாளர்களுக்கு அதிக செலவு
செய்யவேண்டியுள்ளதாக பட அதிபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். #Nayanthara

நடிகை நயன்தாரா, படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றுவதாகவும் தன்னுடன் நிறைய
உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க நிர்ப்பந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நயன்தாரா நடித்த படங்கள் நன்றாக ஓடி வசூல் குவிக்கின்றன. தெலுங்கிலும் அவரது படங்களுக்கு வரவேற்பு உள்ளது.

நயன்தாராவின் படங்களை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியிட்டும் லாபம் பார்க்கிறார்கள். சமீபத்தில் கலெக்டராக தமிழில் நடித்து இருந்த ‘அறம்’ படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படி இரண்டு மொழிகளிலும் தனது படங்களை வெளியிடுவதாலேயே சம்பளத்தை நயன்தாரா பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.

ஏற்கனவே ரூ.2 கோடி, ரூ.3 கோடி என்று சம்பளம் வாங்கிய அவர் தற்போது சம்பள
தொகையை ரூ.5 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ் பட
அதிபர்கள் சங்க கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நடிகர்-நடிகைகள் சம்பளத்தை
குறைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

நடிகர்-நடிகைகள் உதவியாளர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது என்று பட அதிபர்கள் குற்றம் சாட்டினார்கள். “ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா படப்பிடிப்புக்கு வரும்போது தன்னுடன் 5 உதவியாளர்களை அழைத்து வருகிறார். அவர்களுக்கு ஒரு நாள் செலவு மட்டும் ரூ.60 ஆயிரம் ஆகிறது. அது தவிர நயன்தாரா ஓய்வெடுக்கும் கேரவனுக்கு தினமும் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. உதவியாளர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவும் தயாரிப்பாளர்கள் தலையில் தான் விழுகிறது என்று பட அதிபர்கள் குற்றம் சாட்டினார்கள்.

நயன்தாராவின் சம்பளம் தவிர அவரது உதவியாளர்களுக்கு ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் அல்லது ரூ.1 கோடி என்று கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்பு காரணமாக உதவியாளர்களுக்கு தனது கையில் இருந்து சம்பளம் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது வருங்கால கணவர் என்று அறிவித்து இருவருக்கும் நிச்சயம் நடந்துள்ளதை நயன்தாரா உறுதிபடுத்தி உள்ளார். #Nayanthara

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com