பிக்பாஸ் 3 போட்டியாளர்களின் தேர்வு தொடங்கியாச்சு!

big-boss-3

வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் 3 சீசனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில் வருகிற ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தமிழரசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.சாந்தினி தமிழரசன் தமிழில் வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இவர் டான்ஸ் மாஸ்டர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நம்பத்தகுந்த இடத்தில் இருந்து இந்த தகவல் கிடைத்தாலும் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

மேலும் இந்த பிக் பாஸ் 3-வது சீசனில் பிரபல நடிகைகளான சுதா சந்திரன் ,லைலா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. கூடிய விரைவில் இதன் ப்ரோமோ வீடியோ வெளியிடப்படும் என்பது கூடுதல் தகவல்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com