புதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். 37 வயதான பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜோத்பூரில் நடந்தது.

உலக அளவில் அதிகம் பாப்புலர் ஆன இந்த நட்சத்திர ஜோடி தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் என்சினோ என்ற இடத்தில் வீடு வாங்கியுள்ளனர்.

20 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டிற்கு அவர்கள் 20 மில்லியன் டாலர்கள் விலை கொடுத்துள்ளனர். இது இந்திய ருபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 144 கோடி ருபாய். மிக பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த வீட்டில் மொத்தம் 7 படுக்கையறைகள், 11 குளியலறைகள், நீச்சல் குளம், பொழுதுபோக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், ரெஸ்டாரண்ட் மற்றும் பார், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com