மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

mani-ratnam_6

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் மணிரத்னம். பல வெற்றி படங்களை இயக்கியுள்ள மணிரத்னத்தின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘காற்று வெளியிடை’. தற்போது ‘செக்க சிவந்த வானம்’ படத்தை இயக்கி வருகிறார். சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மணிரத்னம் இன்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் சாதாரண பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *