மைம் கோபியை நெகிழ வைத்த விஜய்

NTLRG_160206135945000000

வில்லனாக பல படங்களில் பிசியாக நடித்து மைம் கோபியை நடிகர் விஜய், ஒரு சமயத்தில் நெகிழ வைத்திருக்கிறார். #MimeGopi

வில்லன், குணச்சித்திரம், சிறப்புத் தோற்றம் என்று பல படங்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் மைம் கோபி. இவர் விஜய்யுடன் ‘பைரவா’, ரஜினியுடன் ‘கபாலி’ மற்றும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பு அனுபவம் பற்றி மாலைமலருக்கு கூறும்போது, ‘நான் ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தேன். அப்போது, கிரிக்கெட் விளையாடும் போது சண்டைக்காட்சி ஒன்று இடம் பெறும். இதற்காக விஜய்க்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நான் உண்மையாக பந்து வீச, விஜய் நிஜமாகவே விளையாடினார்.
ஏன் அதிகமாக பேச மாட்றீங்க என்று விஜய்யிடம் கேட்டேன். அதற்கு சிரித்துக் கொண்டே அது அப்படித்தான் பழகிடுச்சு என்றார். பின்னர், என் தம்பி தெய்வக்குழந்தை. அவனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்றேன். அதற்கு நாளை உடனே அழைத்து வாருங்கள் என்றார். மறுநாள் படப்பிடிப்பு தளத்திற்கு என் தம்பி வந்தான். அவனை அருகில் உட்கார வைத்து அரை மணிநேரம் பேசினார். என் தம்பி பேசிக்கிட்டே இருந்தான். விஜய்யும் பொறுமையாக என் தம்பி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். என் தம்பிக்கு 2 விசயம்தான் பிடிக்கும். ஒன்று பிரியாணி, மற்றொன்று விஜய். அவரிடம் பேசிக்கொண்டே எனக்கு எப்போ டிரீட் வைப்பிங்க என்று விஜய்யிடம் கேட்டான். அவரும் பிரியாணி வாங்கித்தரேன் என்று உறுதியளித்தார்.
என் தம்பி விஜய்யிடம் பேசியது என்னை நெகிழ வைத்தது. பின்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் வீட்டு அருகே, என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என்னை ஒரு கார் கடந்து சென்றது. சிறிது தூரம் சென்ற காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து, சார் உங்களை கூப்பிட்டார் என்று சொன்னார். நான் போய் பார்த்தால் விஜய் உள்ளே இருந்தார். என்ன நண்பா இங்கு ஷூட்டிங்கா என்று கேட்டார்.
நான் தாடி எல்லாம் எடுத்து வித்தியாசமாக இருந்தேன். ஆனால், விஜய் என்னை அடையாளம் கண்டுக்கொண்டு என்னிடம் பேசி விட்டு சென்றார்.
அதுபோல், ரஜினியின் நடிப்புக்கு நான் அடிமை. அவரை எப்போது பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். பா.இரஞ்சித் மூலமாக கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரஜினி மின்னல் போன்றவர். இவருடைய சுறுசுறுப்பு யாருக்கும் இருக்காது. அவர் நடிக்கும் முதல் காட்சியை நேரில் பார்க்கும் போது அசந்து போனேன். 10 சிங்கத்திற்கு சம்மானவர். என்னுடைய நடிப்பையும் மிகவும் புகழ்ந்தார்’ என்றார்.
Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன