யுவன் சங்கர் ராஜா – சந்தோஷ் நாராயணன் கூட்டணி

yuvan-santhosh

யுவனும், சந்தோஷ் நாராயணனும் சேர்ந்து ஒரு படத்துக்கு இசையமைக்க இருக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் உறவினர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பேய்ப்பசி’. யுவனின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நமிதா, அம்ரிதா ஐயர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர், தியாகராஜன் குமாரராஜவிடம் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றியவர்.

இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு பாடல் பாடுகிறார். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணனும் இசையமைக்கிறார். இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பதால், இந்தப் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன