ரஜினிக்கு அடுத்தது சிவகார்த்திகேயன் தான்!

rajini sivakarthikeyan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் வேலை செய்த முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள்
சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன் படத்திலும் வேலை செய்து வருவது அவரது ரசிகர்கள் இடையே ஆரவாரத்தை
ஏற்படுத்தியுள்ளது.

மெரினா திரைப்படம் மூலம் ஹீரோவாக திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். பிரபல
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்த சிவகார்த்திகேன், தனது டைமிங் காமெடியாலும், இயல்பான நடிப்பாலும்
தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அதைத்தொடர்ந்து ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர் சூரியுடன் நடித்தார். இவர்களின் காமெடி அனைத்து
வயதினரையும் ரசிக்க வைத்தது.
இவர் அதிக காலம் திரையுலகில் நிலைக்கமாட்டார் என்றும், திடீர் அதிர்ஷ்டத்தால் ஹீரோ ஆகிவிட்டார் என்று பலர்
விமர்சித்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் தனது திறமையை அடுத்தடுத்த படங்களில் வெளிக்காட்டினார்.

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படத்தில் , நடிப்பின் உச்சத்தை சிவா
வெளிகாட்டியுள்ளார். மேலும் அதுவரை கமர்ஷியல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இவர் , கதைக்கு
முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வருகிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *