ரஜினி படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்

simran-nawaz

காலா படத்தை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

பாபி சிம்ஹா மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தற்போது சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் ஆகியோர் இணைந்துள்ளனர். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன