விஜய் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்கும்! வதந்தியால் குழப்பமடையும் ரசிகர்கள்

விஜய், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தன்னுடைய 63-வது படத்தில் கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் மிகப் பிரம்மாண்டமான செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

ஃபுட் பால் பயிற்சியாளராக விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாக கூறி சமூகவலைதளத்தில் ஒருவர் 63 படத்தின் தலைப்பு குறித்து ஓவர் பில்டப் செய்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், விஜய் 63 வது படம் பற்றிய தகவல்கள் மிக விரைவில் வெளியாக உள்ளதாகவும், இந்த படத்தின் டைட்டில் அபாரம், அழகு, ஆச்சரியம் என அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும் என ட்விட் செய்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் இதுவரை கேள்விப்படாத ஒரு பெயராகத்தான் இருக்கும் என்றும், அகராதியில் தான் இதற்க்கான அர்த்தம் தேட வேண்டும் என கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும், அதுவரை காத்திருப்போம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com