விவசாயத்தை மீட்க நடிகர் கார்த்தியின் புதிய பயணம்!

கடந்த சில நாட்களாக நடிகர் கார்த்தியை ‘கடைக்குட்டி சிங்கம்’ என்றுதான் ரசிகர்கள்
அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள வேணுகோபால்
என்பவரது விளைநிலங்களுக்கு சென்றுள்ளார்.

வேணுகோபாலின் விவசாய முயற்சி, குணநலன்களைப் பார்த்து வியந்து போன நடிகர்
கார்த்தி, தானும் அவருடன் இணைந்து விவசாயம் செய்துள்ளார்.

இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகர் கார்த்தி, “இயற்கை விவசாயத்தைப் பார்த்து பல புதுமையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அனுபவங்களைத் தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். அங்கே கிடைத்த இயற்கையான காற்று, அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடைகள் என அனைத்துக் காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்,” என்றார்.

மெக்கானிக்கல் எஞ்ஜினியரான வேணுகோபால் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார்.

நடிகர் கார்த்தி பற்றி வேணுகோபால் கூறுகையில், “நான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர், நடிகர் கார்த்தியின் குடும்பம் வந்து உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் விரும்புகின்றனர் என்று கூறினார். மறுநாளே கார்த்தி சார் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன். கார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாடுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கைப் பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து நமக்குதான் என்பதை உணர வேண்டும். எனவே செயற்கையானவற்றைத் தவிர்த்து இயற்கை தரும் பலன்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதன்படி வாழ முயற்சிசெய்வோம்.

மேலும், செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் www.ilearnfarming.com,” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com