விஷாலுடன் இணையும் ராஷி கண்ணா

‘இரும்புத்திரை’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் விஷால். இதில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கவுள்ளார். விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்திருந்தனர். பூரி ஜெகன்நாத் இயக்கி இருந்தார். 2015ம் ஆண்டு இப்படம் வெளியானது. நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com