வீட்டை இடித்த நடிகர் விஜய்

actor_vijay

நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டை இடித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நடிகர் விஜய் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தார். அதன்பிறகு அடையாருக்கு சென்ற அவர், சாலிகிராமம் வீட்டை விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு தந்தார்.

அடையார் வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில், குழந்தைகள் பிறந்தன. அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகத் தொடங்கினர்.

இதனால் ஏற்பட்ட இட நெருக்கடியால், நீலாங்கரை பகுதியில் அமைதியான சூழலில் வீட்டை கட்டினார். ஆனால் தற்போது அப்பகுதி நெருக்கடி நிறைந்த இடமாக மாறிவிட்டது.

இதனால் பனையூரில் வீடு ஒன்றை கட்டினார். இந்நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில், நீலாங்கரை வீட்டை இடித்து, அதிநவீன வசதிகளுடன் புதிய வீடு கட்டத் திட்டமிட்டார்.

இதையடுத்து பணிகள் தொடங்கப்பட்டு, வீடு முற்றிலும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன