வைரலாகும் பாபி சிம்ஹாவின் குழந்தை புகைப்படம்

நடிகா் பாபி சிம்ஹாவின் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2012ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி , தொடா்ந்து ஜிகா்தண்டா உட்பட பல படங்களில் நடித்து, தேசிய விருதையும்ப் பெற்றவர் நடிகா் பாபி சிம்ஹா.

இந்நிலையில் கடந்த 2016ல் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். அடுத்த வருடமே இவா்கள் விவாகரத்து பெற உள்ளதாக வதந்திகள் பரவின. ஆதனை பொய்யாக்கிய காதல் ஜோடிக்கு தற்போது முத்ரா சிம்ஹா என்ற பெண் குழந்தை உள்ளது.

bobby-simha-child_2

சமீபத்தில் பாபி சிம்ஹாவின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். அப்போது எடுக்கப்பட்ட முத்ரா சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனனின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com