ஒரே நாளில் 12 படங்கள் ரிலீஸ்

tamilnadu_theatre

வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் மூன்றாம் தேதி கோலிவுட்டில் கஜினிகாந்த், மணியார் குடும்பம் உள்ளிட்ட 12 படங்கள் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் வாரம் நான்கு படங்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் ஒரே நாள் 12 படங்கள் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் கமலின் ‘விஸ்வரூபம்-2’ ம், அதற்கு அடுத்த வாரம் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’வும் வெளியாகவிருப்பதால் மற்ற அனைத்து படங்களும் இந்த வாரமே வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 12 படங்களுக்கும் திரையரங்கங்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இருப்பினும் 11 படங்கள் உறுதியாக வெளியாகுமென்று கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *