2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு

enthiran-2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகும் படம் 2.0. கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாகவும், கதாநாயகியாக எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். கடந்த தீபாவளிக்கே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொன்டே இருந்தது.

இந்நிலையில் கிராபிக்ஸ் வேலைகள் முடிவடைந்ததால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி 2.0 படம் ரிலீசாகும் என்று படத்தின் இயக்குனர் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன