தீபாவளி ரேஸில் 4 படங்கள்

4-Films-to-clash-for-Diwali

இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யா, விஷால் என்று நான்கு முன்னணி கதாநாயகர்களும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அஜித், விஜய், சூர்யா, விஷால் இவர்களில் ஏதாவது இரண்டு ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதே அபூர்வமான ஒன்று.

இந்த ஆண்டு விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம், அஜித் சிவா கூட்டணியில் தயாராகும் `விஸ்வாசம்’, சூர்யா செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் `என்ஜிகே’ படம் ஆகியவை தீபாவளி அன்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விஷால் நடிப்பில் உருவாகும் `சண்டக்கோழி 2′ படத்தையும் தீபாவளிக்கு இறக்க திட்டமிடுகிறார்கள். இதனால் நான்கு முனை போட்டி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை.

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. நான்கு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. ஏதாவது இரண்டு படங்கள் தள்ளி போகலாம். முன்னதாக ரஜினி நடிக்கும் 2.0 படம் தீபாவளிக்கு என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் தள்ளி போகும் என்பதால் மற்ற பெரிய படங்கள் போட்டி போடுகின்றன.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன