தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தும் ஆதி

AADHI

2007 ஆம் ஆண்டு வெளியான ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஆதி, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த ‘ஈரம்’ பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால், அதன் பிறகு வெளிவந்த ஆதியின் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால், தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ படம் பெரும் வெற்றி பெற்ற நிலையிலும், ஆதிக்கு தமிழில் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அவர் நடித்த தெலுங்குப் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

கடந்த மாதம் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஹீரோவுக்கு தம்பியாக ஆதி நடித்திருந்தார். அப்படமும் பெரிய வெற்றி பெற்றது. இதனால், ஆதிக்கு தெலுங்கில் ஏகப்பட்ட படங்கள் கையிருப்பு இருக்கிறதாம். ஆனால், அவை அனைத்தும் இரண்டாவது ஹீரோ, சப்போர்டிங் கேரக்டர் போல தான் இருக்கிறதாம்.

எந்த வேடமாக இருந்தால் என்ன தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் போதும், என்ற மனநிலைக்கு வந்திருக்கும் ஆதி, இனி முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம். அதனால், கோடம்பாக்கத்திற்கு தற்போது டாடா காட்டிவிட்டார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *