கலைஞரைப் பார்க்க காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்த அஜித்

ajithkumar

திமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர், துணை முதலைமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பல தலைவர்கள் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ajith-stalin

அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம் உள்பட பலரும் காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் மகனும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நடிகர் அஜித்குமார் காவேரி மருத்துவனைக்கு நேரில் வந்து கலைஞரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன