சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா

Surya-Arya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் போமன் ஹிராணி, சமுத்திரக்கனி, மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹீரோயினாக சாயீஷா நடிக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக ஆர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், ஆர்யா தற்போது லண்டனில் இருப்பதோடு, நடிகர் போமன் ஹிராணி வெளியிட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அவரும் சூர்யாவின் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

ஆர்யா வில்லனாக நடிப்பதை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருக்க முடிவு செய்திருந்த நிலையில், தற்போது ஆர்யா மூலமாகவே அந்த சஸ்பென்ஸ் உடைந்திருக்கிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன