மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதர்வா

Actor-Atharvaa

பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இந்நிலையில் அதர்வா நடிப்பில் கடந்த வாரம் செம்ம போத ஆகாத என்ற படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இவரிடம் தன் தந்தையின் நினைவுகள் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில் ‘என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அக்காவின் நிச்சயத்தார்த்தம் முடிந்தது. அந்த சமயத்தில் என்னிடம் சம்மந்தம் இல்லாமல், ஏதேதோ அப்பா பேசினார், பிறகு அங்கிருந்த நான் சென்ற ஒரு மணி நேரத்தில் அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நான் அங்கிருந்தால் ஏதாவது செய்ய முயற்சித்து இருப்பேன், அந்த குற்ற உணர்ச்சி தற்போதும் உள்ளது’ என அதர்வா கண்ணீருடன் பேசினார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன