இரட்டை குழந்தைக்கு அப்பாவான பரத்

bharath2

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் பரத், ‘காதல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பமடைந்த ஜெஸ்ஸிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்திய பரத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நடிகர் பரத், இரட்டை சந்தோஷம் என்றும் தாயும் சேயும் நலம் என்றும் ரசிகர்கள் அன்புக்கு நன்றி என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன