உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் – ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் நடிப்பில், சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘டிக் டிக் டிக்’, இந்திய சினிமாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்ற பெருமையை பெற்றதோடு, மக்களின் பேராதரவை பெற்று மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் பத்திரிகையாளர்கள் முன்பு கொண்டாடப்பட்டது. இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், ஜெயம் ரவி, அவரது மகன் மாஸ்டர் ஆரவ் ரவி, இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்ட இந்த விழாவில், டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாக நடித்திருக்கும் அவரது சொந்த மகன் ஆரவ் ரவியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “என் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம். உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும், என்பது தான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். நாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குனர் சக்தி.

இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை, ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும் என்றார். கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இமான் இவ்வளவு உயரத்துக்கு போனாலும் ரொம்ப தன்னடக்கம் உடையவர். மைக்கேல் மாஸ்டர் கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு ஏற்ற உயர்வு இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இந்த படத்தின் முதல் ரசிகன் எடிட்டர் பிரதீப் தான். எனக்கும் என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய குறும்பா பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும். இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் உழைப்பு அபரிமிதமானது. அவர்களின் உழைப்பை பார்த்த பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கையே வந்தது. கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை, கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக் சாருக்கு நன்றி. என் மகன் ஆரவ் நடித்த குறும்பா பாடலை 2000 முறையாவது பார்த்திருப்பேன். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன், நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார்.” என்றார்.

இயக்குநர் மோகன் ராஜா பேசும் போது, “டிக் டிக் டிக் மொத்த குழுவின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. டைட்டானிக் படத்தின் படப்பிடிப்பு நாட்களை நினைத்து பிரமித்திருக்கிறேன். அது மாதிரி டிக் டிக் டிக் படத்தை 56 நாட்களில் முடித்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய நேரங்களில் ரவியின் உழைப்பு வீணாய் போய் விடுமோ என்று பயந்ததுண்டு. ரவியும் ஒரு கட்டத்தில் உண்மையான உழைப்பை நம்பணுமா என்று நினைத்த காலம் உண்டு. உயிரை பணயம் வைத்து பேராண்மை, பூலோகம், ஆதி பகவன், டிக் டிக் டிக் என பல படங்களில் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறான். எல்லா நேரங்களிலும் தன் உழைப்பை கொடுத்துக் கொண்டே தான் இருந்தான். அவனுக்கு கிடைத்த வெற்றியாக இதை நினைத்துக் கொள்கிறேன்.” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com