’இரும்புத்திரை’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் கார்த்தி

karthi

கடந்த மே மாதம் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சமந்தா ஹீரோயினாக நடித்த இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார்.

டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டிய இப்படம் பொழுபோக்கு சினிமாவாக மட்டும் அல்லாமல், மக்களை எச்சரிக்கும் விழிப்புணர்வு படமாகவும் அமைந்தது தான் இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.

இதற்கிடையே, இப்படத்தின் இயக்குநர் அடுத்தப் படமும் டிஜிட்டல் சம்மந்தமான சப்ஜெட் படம் தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ’இரும்புத்திரை’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு ஹீரோயினுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவர் முன்னணி நடிகையாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன