நிஜ அம்பேத்கராக மாறிய நடிகர்

ambetkar-getup

‘ஆய்வுக்கூடம்’ படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ராஜகணபதி தற்போது புதிய படமொன்றில் அம்பேத்கராக நடிக்கிறார். ‘பீம்’ என்ற அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அச்சு அசலாக அம்பேத்கரைப் போலவே இருக்கிறார்.

எனவே தற்போது இந்த புகைப்படத்தை கட்-அவுட் மற்றும் பேனர்களில் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்த போஸ்டர்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களிலும் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ள நடிகர் ராஜகணபதி,”ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சிறந்த தலைவராக விளங்கியவர் சட்ட மேதை அம்பேத்கர். அவருடைய வேடத்தில் நடிப்பது தனக்குக் கிடைத்த பெருமை”, என்றுக் கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன