எனக்கும் தனுஷுக்கும் இடையே போட்டி இருந்தது உண்மை – சிம்பு

Simbu-Dhanush

கோலிவுட்டில் சிம்புவிற்கும், தனுஷிற்கும் இடையே கடும் போட்டி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக இவர்களுடைய ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் அதிகம் மோதிக் கொள்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கும் வகையில் கருத்து தெரிவிப்பது வழக்கம்.

இந்நிலையில், “தனக்கும் தனுஷிற்கும் இடையே போட்டி இருந்தது உண்மை தான்”, என்று சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், “அது தொழில்ரீதியான போட்டி மட்டுமேயன்றி தனிப்பட்ட போட்டி அல்ல”, என்றும் கூறியுள்ளார். “முன்பு பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் சென்றுவிடுவதால் பலர் பலவிதமான வதந்திகளை பரப்பி விட்டனர். இப்போது இருவரும் சந்திக்கும் போது பேசிக் கொள்வதால் எந்த பிரச்சனையும் தற்போது இல்லை”, என்று சிம்புக் கூறியுள்ளார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன